என் மலர்

  செய்திகள்

  சோழத்தரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் விபத்தில் பலி
  X

  சோழத்தரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் விபத்தில் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோழத்தரம் அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  ஸ்ரீமுஷ்ணம்:

  சோழத்தரம் அருகே உள்ள வடக்குப்பாளையாங் கோட்டையை சேர்ந்தவர் ஞானபிரகாசம். இவரது மகன் அலெக்ஸ் பாண்டியன் (வயது 25). இவர் சிமெண்ட் சிலாப் தயார் செய்வதில் தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார்.

  அலெக்ஸ்பாண்டியனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்து சோழத்தரத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பின்னர் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

  அவர் வந்த மோட்டார் சைக்கிள் அண்ணாநகர் பகுதியில் உள்ள சிதம்பரம்-ஸ்ரீமுஷ்ணம் சாலையில் சென்ற போது அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியது.

  இதில் தூக்கி வீசப்பட்ட அலெக்ஸ்பாண்டியன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அலெக்ஸ்பாண்டியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  விபத்து குறித்து சோழத்தரம் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அலெக்ஸ்பாண்டியன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×