என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூரில் வங்கி ஊழியர் காதலியுடன் போலீசில் தஞ்சம்
    X

    திருப்பத்தூரில் வங்கி ஊழியர் காதலியுடன் போலீசில் தஞ்சம்

    திருப்பத்தூர் போலீஸ் நிலையத்தில், பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதியினர் தஞ்சம் அடைந்தனர். இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த பி.எம்.சி., நகரை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 25). டிப்ளமோ படித்துவிட்டு தனியார் வங்கியில் பணிபுரிகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சத்யா (20). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவர, பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து, காதர்கள் சசிகுமார், சத்தியா இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி திருப்பத்தூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், இன்று காலை காதல் தம்பதியினர் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர்.

    மனுவில், இரு வீட்டு பெற்றோர்களால், எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால், எங்களுக்கு பதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ராணி இரு வீட்டாரின் பெற்றோர்களை அழைத்து சமாதானப்படுத்தினர். இதை பெண் வீட்டார் ஏற்று கொள்ளவில்லை. இதையடுத்து, பெண் வீட்டாரிடம், காதல் தம்பதியினருக்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என போலீசார் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

    மேலும், காதல் தம்பதியினரை மாப்பிள்ளையின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×