search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முட்புதரை அகற்றியபோது வெடித்ததில் 2 பேர் படுகாயம்: நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியது ரவுடி கும்பலா?- போலீசார் தீவிர விசாரணை
    X

    முட்புதரை அகற்றியபோது வெடித்ததில் 2 பேர் படுகாயம்: நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியது ரவுடி கும்பலா?- போலீசார் தீவிர விசாரணை

    • தகவல் அறிந்ததும் செங்கல்பட்டில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
    • தொழிற்சாலையின் பின்புறம் உள்ள முட்புதரில் வெடிகுண்டுகள் எப்படி வந்தது?

    திருப்போரூர்:

    திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் அட்டைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. கடந்த 5 மாதங்களாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையை சுற்றிலும் மற்றும் பின்புறத்திலும் ஏராளமான முட்புதர்கள் இருந்தன.

    இதனை அகற்றும் பணியில் பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சீனு, தினேஷ் உள்ளிட்ட 4 தொழி லாளர்கள் ஈடுபட்டனர். அப்போது முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தொழிலாளர்கள் சீனு, தினேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் செங்கல்பட்டில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர். போலீசாரின் தீவிர சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்து மேலும் 2 வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. அதனை வாளியில் வைத்து பத்திரமாக போலீசார் எடுத்து சென்ற னர். தொழிற்சாலையின் பின்புறம் உள்ள முட்புதரில் வெடிகுண்டுகள் எப்படி வந்தது? யார் இதை இங்கு வைத்தது? ரவுடி கும்பல் இதனை இங்கு பதுக்கி வைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் ரவுடிகள் 2 பேர் எடுத்து வந்த நாட்டு வெடிகுண்டு ஒன்று திருப்போரூர் பஸ்நிலையம் அருகே எதிர்பாராத விதமாக வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து கேளம்பாக்கம் பகுதியில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் திருப்போரூர் அடுத்த இள்ளலூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது தண்டலம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பறிமுதல் செய்யப்பட்ட2 நாட்டு வெடிகுண்டுகளையும் முருக மங்கலத்தில் உள்ள வெடிபொருள் கிடங்கிற்கு போலீசார் எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×