search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகளிர் உரிமைத் தொகைக்காக 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மகளிர் உரிமைத் தொகைக்காக 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு

    • மகளிர் உரிமைத் தொகையை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பெற்று பயனடைந்துள்ளனர்.
    • கடைசி நாளான அக்டோபர் 25-ம் தேதி வரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி இந்தப் பணம் அவரவர் வங்கிக் கணக்குக்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதற்கு ஒருநாள் முன்னதாகவே குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு விடுகிறது.

    கடந்த மாதம் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14-ம் தேதியே குடும்பத் தலைவிகளுக்கு பணம் கிடைத்துவிட்டது.

    மகளிர் உரிமைத் தொகை பெற அதிகப்படியானோர் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வங்கி கணக்குகளை தொடங்கி இருந்தனர். மேலும் வங்கி கணக்கில் சிக்கல் உள்ளவர்களுக்கு மணியார்டர் மூலமும் பணம் அனுப்பப்பட்டது.

    இந்தப் பட்டியலில் சிலருக்கு இன்னும் பணம் கிடைக்காமல் உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

    அவ்வாறு பணம் போய் சேராமல விடுபட்டவர்களுக்கு 10-ம் தேதிக்குள் பணம் கிடைக்கும் வகையில் ரூ.1000 அனுப்பிவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை கருத்தில் கொண்டு விடுபட்டவர்களுக்கு முன்கூட்டியே பெண்களுக்கான உரிமைத் தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மகளிர் உரிமைத் தொகை மேல் முறையீட்டு மனுக்கள் 11 லட்சத்து 85 ஆயிரம் வந்திருந்தது. இதனால் கடந்த மாதம் 25-ம் தேதியுடன் மனு வாங்குவது நிறுத்தப்பட்டது. இந்த மனுக்கள் மீது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். வீடுகளுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தப் பணிகள் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் எவ்வளவு பேர் தகுதியானவர்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு 25-ம் தேதியில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். அடுத்த மாதம் முதல் பணம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×