என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
    X
    LIVE

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

    • கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
    • இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.

    ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    Live Updates

    • 6 Oct 2023 7:11 AM IST

      வங்காளதேச அணியின் 2வது விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் சாய்த்தார். 5.4 ஓவரில் 21/2

    • 6 Oct 2023 7:05 AM IST

      வங்காளதேச அணியின் முதல் விக்கெட்டை சாய் கிஷோர் சாய்த்தார்.

    • 6 Oct 2023 7:01 AM IST

      வில்வித்தை பெண்கள் ரிகர்வ் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை 6-2 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    • 6 Oct 2023 6:38 AM IST

      இந்திய அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலாக ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

    • 6 Oct 2023 6:26 AM IST

      முதலாவது அரையிறுதியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    • 5 Oct 2023 8:55 PM IST

      ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி சிங்கப்பூரின் என்ஜி ஜூ ஜி/ஜோஹான் பிரஜோகோவை 21-7, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தது.

      இதையடுத்து, நாளை நடைபெறும் அரையிறுதியில் மலேசியாவின் ஆரோன் சியா/சூ வூய் யிக்கை, சாத்விக்- சிராக் ஜோடி எதிர்கொள்கிறது.

    • 5 Oct 2023 5:33 PM IST

      கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில், இந்தியா- மலேசியா அணிகள் மோதின. இதில், மலேசிய வீரர்களை வீழ்த்தி இந்திய வீரர்கள் கார்த்திக் தீபிகா பலிக்கல், சந்து ஹரிந்தர் பால் சிங் ஆகியோர் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.

    • 5 Oct 2023 5:26 PM IST

      ஆண்களுக்கான ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் சவுரவ் கோசல் 1-3 என்ற கணக்கில் ஈன் யோவ் என்ஜியிடம் தோற்றார். இதன்மூலம், சவுரவ் கோசல் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.

    • 5 Oct 2023 5:13 PM IST

      பெண்கள் மல்யுத்தம் போட்டியில் 53 கிலோ எடை பிரிவில், இந்திய வீராங்கனை ஆண்டிம் பங்கால் மற்றும் மங்கோலியா வீராங்கனை பாட் ஆச்சிர் போலோர்டுயா ஆகியோர் மோதினர். இதில், 3-1 கணக்கில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

    • 5 Oct 2023 4:06 PM IST

      கிரேக்க-ரோமன் மல்யுத்தம், வெண்கலப் பதக்கப் போட்டியில் 130 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நவீன் தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கொரியாவின் கிம் மின்சோக் ஐந்து புள்ளிகளை பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

    Next Story
    ×