என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
    X
    LIVE

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

    • கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
    • இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.

    ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    Live Updates

    • 25 Sept 2023 8:00 AM IST

      துடுப்பு படகுப் போட்டியில் ஆண்கள் காக்லெஸ் 4 பிரிவில் இந்தியா வீரர்கள் வெண்கலம் வென்றனர்.

      உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கமும், சீனா வெள்ளிப் பதக்கமும் வென்றது.

      இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • 25 Sept 2023 7:48 AM IST

      துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆண்கள் அணி சார்பில் திவ்யான்ஷிங் பன்வார், ருத்ரான்க்‌ஷ் பாட்டீல், பிரதாப் சிங் தோமர் ஆகியோர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர்.

    • 25 Sept 2023 7:44 AM IST

      10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா, கொரியா, சீனா இடையே போட்டி நிலவுகிறது. இந்தியா எந்தப் பதக்கத்தை பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • 25 Sept 2023 7:19 AM IST

      துடுப்பு படகுப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பல்ராஜ் சிங் பன்வார் 4வது இடம் பிடித்து வெண்கலத்தை தவறவிட்டார். சீன வீரர் தங்கமும், ஜப்பான் வீரர் வெள்ளியும், ஹாங்காங் வீரர் வெண்கலமும் வென்றனர்.

    • 25 Sept 2023 6:41 AM IST

      ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு காலை 6.30 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சார்பில், ருத்ரன்க்‌ஷ் பாட்ட்டீல், ஐஸ்வாரி பிரதாப் சிங் தோமர், திவ்யன்ஷ் சிங் பன்வார் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

    • 25 Sept 2023 6:38 AM IST

      4 பதக்கங்களுக்கான படகு போட்டியில் இன்று இந்தியா பங்கேற்கிறது.

    • 24 Sept 2023 8:09 PM IST

      டேபிள் டென்னிஸ் ஆண்கள் காலிறுதி சுற்றில் இந்தியா - தென்கொரியா அணிகள் மோதின. இதில், இந்திய அணியை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தென்கொரியா அபாரமாக வெற்றிபெற்றது.

    • 24 Sept 2023 7:30 PM IST

      கால்பந்து ஆண்கள் பிரிவில் குரூப் ஏ சுற்றில் இந்தியா - மியான்மர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தது. இதன் மூலம் 1-1 என்ற கோல் கணக்கில் இந்த போட்டி சமன் ஆனது.

    • 24 Sept 2023 6:38 PM IST

      வுஷூ போட்டியில் ஆண்கள் 56 கிலோ பிரிவில் பிலிப்பைன்ஸ் வீரரிடம் இந்திய வீரர் சுனில் சிங் தோல்வியடைந்தார்.

    • 24 Sept 2023 6:26 PM IST

      வாலிபால் போட்டியில் ஆண்கள் கிளாசிபிகேஷன் 1-6 பிரிவில் இந்தியாவை 3-0 என்ற புள்ளிகள் வீழ்த்தி ஜப்பான் வென்றது.

    Next Story
    ×