என் மலர்
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
- கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
- இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.
ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
Live Updates
- 25 Sept 2023 11:48 AM IST
இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணியின் ஷபாலி வர்மா முதல் விக்கெட்டாக 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 25 Sept 2023 11:10 AM IST
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் இறுதியில் இந்திய பெண்கள் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
- 25 Sept 2023 10:54 AM IST
டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ருதுஜா போஸ்லே கஜகஸ்தான் வீராங்கனையை 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- 25 Sept 2023 10:41 AM IST
துப்பாக்கிச் சுடுதல் 25 மீட்டர் பயர் பிஸ்டல் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் விஜய்வீர் சித்து, ஆதர்ஷ, அனிஷ் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- 25 Sept 2023 10:14 AM IST
துப்பாக்கிச் சுடுதல் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் சுற்றில் இந்தியாவின் விஜய் வீர் சித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
- 25 Sept 2023 9:47 AM IST
இன்று நடந்த 3வது இடத்துக்கான கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச பெண்கள் அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது.
- 25 Sept 2023 9:26 AM IST
துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் 228.8 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
சீனா தங்கமும், கொரியா வெள்ளிப் பதக்கமும் வென்றது.
இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- 25 Sept 2023 8:55 AM IST
துடுப்பு படகுப் போட்டியில் இந்திய அணி இதுவரை ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- 25 Sept 2023 8:49 AM IST
துடுப்பு படகுப் போட்டியில் ஆண்கள் நாற்கர ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியா வீரர்கள் இரண்டாவது வெண்கலம் வென்றனர். இந்தியாவின் சத்னம், பர்மிந்தர், ஜாகர், சுக்மீத் ஆகியோர் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.
சீனா தங்கமும், உஸ்பெகிஸ்தான் வெள்ளியும் வென்றது.
இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- 25 Sept 2023 8:34 AM IST
டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.









