என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
    X
    LIVE

    ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

    • கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
    • இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.

    ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    Live Updates

    • 2 Oct 2023 1:57 PM IST

      பேட்மிண்டனில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-10, 21-9 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • 2 Oct 2023 1:51 PM IST

      ஹாக்கி ஆண்கள் பிரிவில் இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் மோதி வருகிறது. முதல் பாதியில் இந்தியா கோல் மழை பொழிந்து வருகிறது.

    • 2 Oct 2023 12:53 PM IST

      வில்வித்தையில் காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், அதிதி ஸ்வாமி ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். நாளை காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    • 2 Oct 2023 12:50 PM IST

      வில்வித்தையில் காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரவின் ஓஜஸ், அபிஷேக் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். நாளை காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    • 2 Oct 2023 11:32 AM IST

      டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் முகர்ஜி சகோதரிகள், தென் கொரிய வீராங்கனைகளுடன் மோதினர். இதில் 3-4 என்ற கணக்கில் தோற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டனர்.

    • 2 Oct 2023 10:31 AM IST

      பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, சாய் பிரதீக் ஜோடி, மகாவ், சீன ஜோடியை 21-18, 21-14 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

    • 2 Oct 2023 10:19 AM IST

      நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறும் காலிறுதி போட்டியில் இந்திய ஆண்கள் அணி நேபாள அணியை எதிர்கொள்கிறது.

    • 2 Oct 2023 8:37 AM IST

      தடகளம்: பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் பி.டி.உஷாவின் தேசிய சாதனையை (55.42 வி.) சமன் செய்துள்ளார். போட்டியில் முதலிடம்பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    • 2 Oct 2023 8:12 AM IST

      தடகளம்:

      தடகளம் ஆண்கள் 400 மீட்ட தடை ஓட்டம் ரவுண்ட் 1 - ஹீட் 1 தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் சந்தோஷ்குமார் தமிழரசன் 2ம் இடம் பிடித்தார். இதே போட்டியில் ரவுண்ட் 1 - ஹீட் 3 தகுதி சுற்று போட்டியில் மற்றொரு இந்திய வீரர் யாஷஷ் பலக்‌ஷா 2ம் இடம் பிடித்தார். இதன் மூலம் தடகளம் ஆண்கள் 400 மீட்ட தடை ஓட்டம் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர்கள் தமிழரசன், பலக்‌ஷா நேரடியாக தகுதி பெற்றனர்.

    • 2 Oct 2023 8:00 AM IST

      ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் சந்தேஷ் ஜெஸ்ஸி, சர்வேஷ் குஷாரே இருவரும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

    Next Story
    ×