என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கிராண்ட் செஸ் டூர்: மட்டம் தட்டிய மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி குகேஷ் அசத்தல் வெற்றி!
    X

    கிராண்ட் செஸ் டூர்: மட்டம் தட்டிய மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி குகேஷ் அசத்தல் வெற்றி!

    • அவரை பலவீனமான வீரர்களில் ஒருவராக நான் கருதுகிறேன் என்று கூறியிருந்தார்.
    • போட்டியில் குகேஷ் தொடர்ச்சியாகப் பெற்ற ஐந்தாவது வெற்றி இதுவாகும்.

    இந்திய இளம் கிராண்ட் மாஸ்டரும் உலக சாம்பியனுமான டி.குகேஷ் குரோஷியாவில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் 2025 போட்டியில் கார்ல்சனை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பெற்றார்.

    வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியின் ஆறாவது சுற்றில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ், கார்ல்சனை தோற்கடித்தார்.

    இந்த வெற்றியின் மூலம், போட்டி புள்ளிகள் பட்டியலில் குகேஷ் முதலிடத்திற்கு முன்னேறினார். போட்டிக்கு முன்பு பேசிய கார்ல்சன், "இதுபோன்ற போட்டிகளில் குகேஷ் சிறந்து விளங்க முடியும் என்று எதையும் நிரூபிக்கவில்லை. அவரை பலவீனமான வீரர்களில் ஒருவராக நான் கருதுகிறேன்" என்று கூறியிருந்தார். ஆனால் குகேஷ் அவரை வென்றது முக்கியத்துவம் பெறுகிறது.

    இந்தப் போட்டியில் குகேஷ் தொடர்ச்சியாகப் பெற்ற ஐந்தாவது வெற்றி இதுவாகும். முன்னதாக இரண்டாம் நாள் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவ் மற்றும் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஃபேபியானோ கருவானா ஆகியோருக்கு எதிராகவும் குகேஷ் வெற்றி பெற்றார்.

    Next Story
    ×