என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வீடியோ: மற்ற 2 அணிகளை விட சிறப்பாக விளையாடினீர்கள்.. ஓமன் அணியை பாராட்டிய சூர்யகுமார்
- இந்த குழுவில் உள்ள மற்ற இரண்டு அணிகளை விடவும் சிறப்பாக விளையாடியுள்ளீர்கள்.
- இந்த உத்வேகத்தைத் தொடருங்கள் என சூர்யகுமார் கூறினார்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனுடன் (ஏ பிரிவு) மோதியது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஓமன் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடைசி வரை போராடிய ஓமன் அணி 20 ஓவரில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஓமன் அணி வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களிடம், நீங்கள் இன்று சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினீர்கள். இந்த குழுவில் உள்ள மற்ற இரண்டு அணிகளை (பாகிஸ்தான், யுஏஇ) விடவும் சிறப்பாக விளையாடியுள்ளீர்கள். இந்த உத்வேகத்தைத் தொடருங்கள். இன்று நீங்கள் செய்ததை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் என கூறினார்.
இதனையடுத்து சூர்யகுமார் யாதவுடன் ஓமன் அணி வீரர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






