search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஜான்டி ரோட்ஸையே மிஞ்சிருவாரு போல.. வைரலாகும் பிலிப்ஸ் பிடித்த கேட்ச் வீடியோ
    X

    ஜான்டி ரோட்ஸையே மிஞ்சிருவாரு போல.. வைரலாகும் பிலிப்ஸ் பிடித்த கேட்ச் வீடியோ

    • 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது.
    • ஒல்லி போப் 77 ரன்னில் பிலீப்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    கிறிஸ்ட்சர்ச்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 319 ரன்கள் எடுத்திருந்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கனே வில்லியம்சன் 93 ரன்னில் அவுட்டானார். பிலிப்ஸ் 41 ரன்னும், சவுதி 10 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பொறுப்புடன் ஆடிய கிளென் பிலிப்ஸ் அரை சதம் கடந்தார். சவுத்தி 15 ரன்னிலும் அடுத்து வந்த வில்லியம் ஓரோர்கே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். பிலிப்ஸ் 58 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் பஷீர், பிரிடன் கேர்ஸ் தலா 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக சாக் கிராலி- பென் டக்கெட் களமிறங்கினர். சாக் கிராலி 0 ரன்னிலும் அடுத்து வந்த ஜேக்கப் பெத்தேல் 10, ஜோரூட் 0, டக்கெட் 46 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 71 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து ஹாரி ப்ரூக் - ஒல்லி போப் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் விளாசினார். 77 ரன்னில் போப் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி ப்ரூக் சதம் அடித்து அசத்தினார். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் பிடித்த கேட்ச் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 53 ஓவரை டிம் சவுத்தி வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தில் போப் அடித்த பந்தை நியூசிலாந்து அணியின் சிறந்த பீல்டரான கிளென் பிலிப்ஸ் பாய்ந்து பிடித்தார்.

    பீல்டர் என்றால் முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரரான ஜாண்டி ரோட்ஸ் தான் நம் நினைவுக்கு வருவதுண்டு. அவரை போலவே இவரவும் அந்தரத்தில் கேட்ச் பிடித்து கிளென் பிலிப்ஸ் அசத்தி உள்ளார் எனவும் விட்டால் அவரையே மிஞ்சி விடுவார் எனவும் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×