என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3வது டி20 போட்டியிலும் வெற்றி: ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்
    X

    3வது டி20 போட்டியிலும் வெற்றி: ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்

    • பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி லாகூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. சைம் அயூப் 37 பந்தில் 56 ரன்னும், பாபர் அசாம் 36 பந்தில் 50 ரன்னும் அடித்தனர். ஷதாப் கான் 19 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 23 ரென்னும் கேமரூன் கிரீன் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் டி20 தொடரை 3-0 என கைப்பற்றி ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது.

    Next Story
    ×