என் மலர்
கிரிக்கெட் (Cricket)

U19 ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா
- மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
- இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது.
19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ்மாத்ரே தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 234 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது.
இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது. மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது. ஆயுஸ்மாத்ரே 38 ரன்னிலும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி 5 ரன்னிலும், மல்கோத்ரா 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து இந்த ஆட்டத்தின் முடிவில், 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 240 ரன்களை எடுத்தது. இதனால், 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.






