என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கருப்புபட்டை அணிந்து விளையாடும் இந்தியா- ஆஸ்திரேலியா வீரர்கள்: காரணம் இதுதான்
- இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்தப் போட்டியில், கேப்டன்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் மிட்செல் மார்ஷ் உட்பட இரு அணி வீரர்களும் தங்களது கைகளில் கருப்புப் பட்டை அணிந்து களமிறங்கியுள்ளனர்.
ஏனென்றால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயது இளம் கிரிக்கெட் வீரரான பென் ஆஸ்டின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவரது குடும்பத்தினருக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவிக்கும் வகையிலும் இரு அணி வீரர்களும் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.
மெல்போர்னைச் சேர்ந்த 17 வயது இளம் வீரரான பென் ஆஸ்டின், ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது கழுத்துப் பகுதியில் அதிவேகமாகத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த போட்டியில் மட்டுமில்லாமல் நேற்று நவி மும்பையில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனைகள் பென் ஆஸ்டினின் நினைவாகக் கருப்புப் பட்டைகளை அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.






