என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்திய மகளிர் அணிக்கு காரை பரிசாக வழங்கிய டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம்
- ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
- இந்திய அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் பரிசுகளை வழங்கி வருகின்றன.
புதுடெல்லி:
அண்மையில் முடிவடைந்த 13-வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது.
உலகக் கோப்பையை முதல்முறையாக உச்சி முகர்ந்த இந்திய அணியை பிரதமர், ஜனாதிபதி நேரில் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
வீராங்கனைகளுக்கு கோடிக்கணக்கில் பரிசு மழை கொட்டியது. அதேபோல், இந்திய அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் பரிசுகளை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், முதல்முறையாக மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மகுடம் சூடிய ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
இதன்படி அவர்களுக்கு மும்பையில் நேற்று பாராட்டு விழா நடத்திய அந்த நிறுவனம் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் டாட்டா சியாரா காரை பரிசாக வழங்கியது.






