என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
    X

    டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

    • அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
    • சிறப்பாக விளையாடிய மில்லர் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின.

    அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மில்லர் - ப்ரேவிஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ப்ரேவிஸ் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுறையில் சிறப்பாக விளையாடிய மில்லர் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டப்ஸ் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    Next Story
    ×