என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சூப்பர் 8 சுற்றில் யார் யாருடன் மோதல்?- இந்தியா விளையாடும் போட்டிகள் விவரம்..!
- சூப்பர் 8 சுற்றில் அகமதாபாத், சென்னை, கொல்கத்தாவில் இந்திய அணி விளையாடுகிறது.
- சென்னையில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.
டி20 உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி வருகின்றன. இதுவரை இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 7 அணிகள் தகுதி பெற்றுள்ளன. "ஏ" பிரிவில் பாகிஸ்தான் அல்லது அமெரிக்கா ஆகியவற்றில் ஒரு அணி தகுதி பெற வேண்டியுள்ளது.
இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மோதும் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 1-ல் இந்தியா X1, வெஸ்ட் இண்டீஸ் X2, ஆஸ்திரேலியா X3, தென்ஆப்பிரிக்கா X4 என்று அழைக்கப்படுகிறது.
அதன்படி இந்தியா வருகிற ஞாயிற்றுக்கிழமை (22-ந்தேதி) தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
26-ந்தேதி (வியாழக்கிழமை) ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
3-வது மற்றும் கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மார்ச் 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.






