என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை 2026: இத்தாலியை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து
- ஜார்ஜ் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இத்தாலி சார்பில் பென் தன் 52 ரன்களை விளாசினர்.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்த ஸ்காட்லாந்து அணி 207 ரன்கள் குவித்தது.
ஸ்காட்லாந்து தரப்பில் தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சே - மைக்கேல் ஜோன்ஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. இதில் ஜார்ஜ் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து மைக்கேல் ஜோன்ஸ் 37 ரன்களில் அவுட் ஆனார்.
கடின இலக்கை துரத்திய இத்தாலி அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. இத்தாலி அணியின் துவக்க வீரரான ஜஸ்டின் மொசகா டக் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய அந்தோனி (13), ஸ்மட்ஸ் (22) என வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய ஹேரி அதிரடியாக ஆடினார்.
இவர் 25 பந்துகளில் 37 ரன்கள் (1 பவுண்டரி, 3 சிக்சர்கள்) விளாச இவருடன் ஆடிய பென் தன் பங்கிற்கு 31 பந்துகளில் 52 ரன்களை (5 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசினர். எனினும், அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி 73 ரன்களில் அபார வெற்றி பெற்றது.
ஸ்காட்லாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய மைக்கேல் லீஸ்க் 4 விக்கெட்டுகளையும், மார்க் வாட் 2 விக்கெட்டுகளையும், பிராட் கரி, பிராட் வீல் மற்றும் ஆலிவர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.






