என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சூர்யகுமார் யாதவ் எனக்கு நிறைய மெசேஜ்  அனுப்புவார்.. பாலிவுட் நடிகை பரபரப்பு பேட்டியால் சர்ச்சை
    X

    சூர்யகுமார் யாதவ் எனக்கு நிறைய மெசேஜ் அனுப்புவார்.. பாலிவுட் நடிகை பரபரப்பு பேட்டியால் சர்ச்சை

    • தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க எனக்கு விருப்பமில்லை
    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சூர்யகுமார் யாதவ் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

    இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறியுள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

    நடிகை குஷி முகர்ஜி ஒரு நேர்காணலில் பேசுகையில்,"எனக்கு கிரிக்கெட் வீரர்களுடன் டேட்டிங் செய்வதில் விருப்பமில்லை. பல கிரிக்கெட் வீரர்கள் என்னைத் தொடர்கிறார்கள். சூர்யகுமார் யாதவ் எனக்கு நிறைய மெசேஜ்கள் செய்வார். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க எனக்கு விருப்பமில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

    நடிகையின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து சூர்யகுமார் யாதவ் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

    இதற்கிடையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சூர்யகுமார் யாதவ் தனது மனைவி தேவிஷாவுடன் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

    Next Story
    ×