என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட்: 2 மாற்றத்துடன் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
- ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ந் தேதி தொடங்குகிறது.
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி விட்டது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கேப்டன் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் காயம் காரணமாக கடைசி 2 டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். மேலும் ஹெசில்வுட் ஏற்கனவே காயத்தில் இருப்பதால் அவரும் இடம் பெறவில்லை.
4வது ஆஷஸ் டெஸ்டுக்கான ஆஸ்திரேலியா அணி:-
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லெபுசென், டாட் மர்பி, மைக்கேல் நெசர், ஜெய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.






