என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சொந்த மண்ணில் வெல்லுமா இலங்கை..!- உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் அயர்லாந்துக்கு 164 ரன்கள் இலக்கு
- மார்க் அடேர் மற்றும் பாரி மெக்கார்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
- ஸ்பின்னர் ஜார்ஜ் டோக்ரெல் சிக்கனமாகப் பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
2026-ம் ஆண்டு ஐசிசி (ICC) டி20 உலகக் கோப்பை தொடரின் 6-வது லீக் போட்டியில், அயர்லாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இன்னிங்ஸின் நடுப்பகுதியில் அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு இலங்கை அணியைக் கட்டுப்படுத்தினர் (ஒரு கட்டத்தில் 87/4).
இருப்பினும், கடைசி ஓவர்களில் கமிந்து மெண்டிஸின் அதிரடி மற்றும் குசல் மெண்டிஸின் அரைசதம் காரணமாக இலங்கை அணி கௌரவமான ஸ்கோரை எட்டியது.
தொடக்க ஆட்டக்காரர்களான பதும் நிசங்கா மற்றும் கமில் மிஷாரா நிதானமான தொடக்கத்தைத் தந்தனர்.
கமிந்து மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 44 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) குவித்து அணியின் ஸ்காரை உயர்த்தினார்.
மார்க் அடேர் மற்றும் பாரி மெக்கார்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஸ்பின்னர் ஜார்ஜ் டோக்ரெல் சிக்கனமாகப் பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்நிலையில், 164 வெற்றி இலக்குடன் அயர்லாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது.






