என் மலர்
கிரிக்கெட் (Cricket)

விற்பனைக்கு வந்த ஆர்சிபி அணி- போட்டி போடும் நிறுவனங்கள்
- ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.
- ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.
இதனை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சிறப்பாக கொண்டாட அணி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சின்னசாமி மைதானம் மூடப்பட்டது. இதனால் ஆர்சிபி அணி அடுத்த ஐபிஎல் போட்டிகளில் மூன்று வெவ்வேறு மைதானங்களில் விளையாட உள்ளது.
இந்நிலையில் பிரிட்டனின் Diageo குழுமத்திற்கு சொந்தமான ஆர்சிபி அணியை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக |(ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், Serum நிறுவன CEO அதார் பூனாவாலா அணியை வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்சிபி அணியின் முதல் தலைவராக மல்லையா இருந்தார். அதனை தொடர்ந்து Diageo குழுமம் இந்த அணியை வாங்கியது. கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து அந்த குழுமம் அணியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் பிரபலமான அணியாக திகழும் ஆர்சிபி அணியை வாங்க இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் போட்டி போட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.






