என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து
- இலங்கை அணியை 145 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- ஆனால் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 207 ரன்கள் எடுத்தது.
பல்லேகலே:
டி20 உலகக் கோப்பை தொடரின் 50-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். பகர் சமான் 84 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து ஆடிய இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப்டன் தசுன் ஷனகா கடைசி கட்டத்தில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 31 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 76 ரன்கள் குவித்து போராடினார். பவன் ரத்நாயகே அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார். போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும், குரூப் 1 பிரிவில் தென் ஆப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.






