என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    IPL இல்லனா என்ன PSL இருக்கு... பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஒப்பந்தம்
    X

    IPL இல்லனா என்ன PSL இருக்கு... பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஒப்பந்தம்

    • கேகேஆர் அணியில் இருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார்.
    • ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முசரபானி கேகேஆர் அணியில் இணைந்துள்ளார்.

    ஐபிஎல் 2026 தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்கவுள்ளது. 10 அணிகளும் போட்டிக்கு தயாராகி வருகின்றனர். இந்த தொடருக்கு முன்னதாக கேகேஆர் அணியில் இருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த சூழலில் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து பிசிசிஐ அவரை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோரிக்கை விடுத்தது. அதனை தொடர்ந்து கேகேஆர் அணி அவரை விடுவித்தது.

    இதனையடுத்து அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முசரபானி அணியில் இணைந்துள்ளார்.

    அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து அதிரடியாக விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் ஐபிஎல் 2026 தொடருக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவது அரிதான ஒன்று. அந்த வகையில் முசரபானி கேகேஆர் அணியில் இணைந்திருப்பது அந்நாட்டு கிரிக்கெட்டுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் கேகேஆர் அணியால் விடுவிக்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான், தற்போது பிஎஸ்எல் 2026 தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கேகேஆர் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் விளையாட உள்ளார். ஐபிஎல் தொடரில் அனுபவம் வாய்ந்த முஸ்தாபிசுர் பிஎஸ்எல் தொடருக்குச் செல்வது பாகிஸ்தானில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×