என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அண்ணன் டா.. கோலிக்காக சிராஜ் செய்த நெகிழ்ச்சி செயல்.. வைரல் புகைப்படம்
- இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய சிராஜ்-க்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்தார்.
- முகமது சிராஜ்-க்கு எப்போதுமே விராட் கோலி மூத்த சகோதரர் போன்றவர்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகளிலும் ஓய்வின்றி விளையாடியது மட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே 185 ஓவர்களை வீசி 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் நல்ல நிலைக்கு காரணமாக திகழ்ந்தார்.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய சிராஜ்-க்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்தார். சிராஜ்- விராட் கோலி சகோதர்கள் போன்று பழகி வருகிறார்கள்.
கடந்து 2018-ம் ஆண்டு சிராஜுக்கு மோசமான ஐபிஎல் தொடராக இருந்தது. அதன்பிறகு சிராஜின் திறனை கவனித்த விராட் கோலி அவரை ஆதரித்து ஆர்.சி.பி அணியில் வாய்ப்பு வழங்கியதோடு இந்திய அணிக்கும் கொண்டு வந்தார்.
எனவே முகமது சிராஜ்-க்கு எப்போதுமே விராட் கோலி மூத்த சகோதரர் போன்றவர். அவரிடம் இருந்து பெற்ற ஆலோசனைகளை தான் சிராஜ் கையாள்கிறார். விராட் கோலியிடம் இருந்து அவர் கோபம் மற்றும் வெற்றிக்கான வெறி ஆகியவற்றை மற்றும் கற்றுக் கொள்ளவில்லை. உடற்தகுதியில் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்த பிட்னஸ் ஆலோசனைகளையும் விராட் கோலியிடம் இருந்து தான் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் விராட் கோலி கையொப்பமிட்ட அவரது ஜெர்சியை சிராஜ் தனது வீட்டின் சுவற்றில் பிரேம் செய்து மாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஜெர்சி 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் கடைசி டெஸ்ட் போட்டியை நினைவுகூரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






