என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பத்திரனா விலகல்- மாற்று வீரர் அறிவிப்பு
- பத்திரனா காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.
- கெண்டைக்கால் தசைப்பிடிப்பில் இருந்து மீண்டு வர பல வாரங்கள் ஆகலாம்.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.
கெண்டைக்கால் தசைப்பிடிப்பில் இருந்து மீண்டு வர பல வாரங்கள் ஆகலாம் என்பதால், ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பாரா? என சந்தேகமும் எழுந்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் பத்திரனாவுக்கு பதிலாக தில்ஷன் மதுஷங்கா இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார்.
Next Story






