என் மலர்
கிரிக்கெட் (Cricket)

VIDEO: ஜேமி ஸ்மித் அடித்த பந்தை சேர்ந்து பிடித்த ஜடேஜா, சாய் சுதர்சன்
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
- இங்கிலாந்து அணியில் ஒல்லி பாப் சதம் அடித்தார்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி தற்போது வரை 7 விக்கெட் இழப்பிற்கு 398 ரன்கள் அடித்து ஆடி வருகிறது.
இப்போட்டியில் ஜேமி ஸ்மித் அடித்த பந்தை பவுண்டரி லைனில் நின்று ஜடேஜா பிடித்தார். அப்போது நிலை தடுமாறிய ஜடேஜா உடனடியாக பந்தை சாய் சுதர்சனிடம் வீசினார். அந்த பந்தை சாய் சுதர்சன் எளிதாக பிடித்தார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.






