என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

4 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட்- மும்பைக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்
- 35 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி திணறியது.
- கிளாசன் 71 ரன்னிலும் அபினவ் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். அதில் ஹெட் 0, இஷான் கிஷன் 1, அபிஷேக் சர்மா 8, நிதிஷ் குமார் 2, அன்கிட் வர்மா 12 என அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் 35 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி திணறியது. இதனையடுத்து கிளாசன் மற்றும் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அபினவ் மனோகர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடிய கிளாசன் 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ரன்னில் வெளியேறினார்.
இதனால் 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 150 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Next Story






