என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    IPL 2025: சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
    X

    IPL 2025: சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

    • குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்சை வீழ்த்தியது.
    • குஜராத் அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

    ஐ.பி.எல். போட்டியில் அகமதாபாத்தில் நேற்று நடந்த 35-வது 'லீக்' ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்சை வீழ்த்தியது.

    இதன் மூலம் அந்த அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்துக்கு முன்னேறியது. குஜராத், டெல்லி, பஞ்சாப், லக்னோ ஆகிய 4 அணிகளும் 10 புள்ளியை தொட்டுள்ளது. நிகர ரன் ரேட் அடிப்படையில் குஜராத் முதல் இடத்தில் உள்ளது.

    இந்த ஆட்டத்தில் குஜராத் அணி மெதுவாக பந்து வீசியது. அந்த அணியில் குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்கவில்லை. இதனால் 20-வது ஓவரில் அந்த அணி வெளிப்புற பகுதியில் ஒரு பீல்டரை கூடுதலாக நிறுத்தும் வாய்ப்பை பறிகொடுத்தது.

    மெதுவாக பந்து வீசியதற்காக குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×