என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஆர்சிபி ரசிகர்களுக்கு குட்நியூஸ்- புமா வெளியிட்ட அறிவிப்பு
- ஆர்சிபி டீசர்ட் வாங்குவதால் தங்களின் பிடித்த பிளேயருடன் பெரிய பேனரில் இடம் பெற ரசிகர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
- விராட் கோலி மட்டுமல்ல இன்னும் சில ஆர்சிபி பிளேயர்களுடனும் நீங்கள் அந்த பேனரில் இடம்பெறலாம்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.
இந்நிலையில் ஆர்சிபி ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகியுள்ளது. ஒரு டீசர்ட் வாங்குவதால் ஆர்சிபி ரசிகர்கள் தங்களின் பிடித்த பிளேயருடன் பெரிய பேனரில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக புமா தெரிவித்துள்ளது. விராட் கோலி மட்டுமல்ல இன்னும் சில ஆர்சிபி பிளேயர்களுடனும் நீங்கள் அந்த பேனரில் இடம்பெறலாம்.
இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது ஆர்சிபி அணியுடன் ஒப்பந்தம் வைத்துள்ள புமா (PUMA) நிறுவனம் ஆகும். பெங்களூருவில் இருக்கும் 100 அடி சாலை, இந்திராநகர் அல்லது பிரிகேட் சாலையில் உள்ள புமா ஸ்டோர்களில் ஆர்சிபி - புமா டீ சர்ட் வாங்கும் ரசிகர்களுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கும்.
இந்த ஸ்டோர்களில் டீ சர்ட் வாங்கும் ரசிகர்கள் ரஜத் படிதார், விராட் கோலி, குர்ணால் பாண்ட்யா, லிவிங்ஸ்டன், புவனேஷ்வர் குமார் மற்றும் சால்ட் ஆகியோருடன் VR photo booths மூலம் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.






