என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ரோகித் சர்மா, சூர்யகுமார் அரை சதம்: சென்னையை எளிதில் வீழ்த்தியது மும்பை
    X

    ரோகித் சர்மா, சூர்யகுமார் அரை சதம்: சென்னையை எளிதில் வீழ்த்தியது மும்பை

    • டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 38-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஷேக் ரஷீத் 19 ரன்னில் வெளியேறினார்.

    அறிமுக வீரரான ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ஆடி 15 பந்தில் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    4வது விக்கெட்டுக்கு இணைந்த சேர்ந்த ஜடேஜா-ஷிவம் துபே ஜோடி 79 ரன்கள் சேர்த்தது, ஷிவம் துபே அரை சதம் கடந்து அவுட்டானார்.

    ஜடேஜா அரை சதம் கடந்து 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். அவருக்கு சூர்யகுமார் யாதவ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் அரை சதம் கடந்தனர்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இது மும்பைக்கு கிடைத்த 4வது வெற்றி ஆகும். சென்னை அணியின் 6வது தோல்வி இதுவாகும்.

    Next Story
    ×