என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

திலக் வர்மா Retired out.. மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே ஓபன் டாக்
- திலக் வர்மா சூர்யகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக விளையாடினார்.
- போட்டியை அவரே முடிக்க வேண்டும் என்றே நினைத்தார்.
ஐ.பி.எல். தொடரின் நேற்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் 7 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டபோது, 23 பந்துகளில் 25ரன்கள் அடித்திருந்த திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்காக ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறிய முதல் வீரரானார் திலக் வர்மா.
இந்நிலையில் திலக் வர்மா சிரமத்திற்குள்ளாகும் போது, வேறு ஒருவர் புதிதாக விளையாட வேண்டும் என எனக்கு தோன்றியது என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
திலக் வர்மா சூர்யகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக விளையாடினார். போட்டியை அவரே முடிக்க வேண்டும் என்றே நினைத்தார். அதற்காக இறுதி ஓவர் வரை விளையாட முற்பட்டார். ஆனால் அவர் சிரமத்திற்குள்ளாகும் போது, வேறு ஒருவர் புதிதாக விளையாட வேண்டும் என எனக்கு தோன்றியது.
கிரிக்கெட்டில் இது எப்போதும் நிகழ்வதுதான். அவரை வெளியேற்றுவது சரியானதல்ல. ஆனால் அதை நாங்கள் செய்ய வேண்டி இருந்தது. அப்போது அது சமயோஜிதமாக தோன்றியது.
இவ்வாறு திலக் கூறினார்.






