என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    IPL மினி ஏலம்: அதிக விலைக்கு ஏலம் போன 2 UNCAPPED வீரர்கள் - ரூ.14.20 கோடிக்கு தட்டிய தூக்கிய CSK
    X

    IPL மினி ஏலம்: அதிக விலைக்கு ஏலம் போன 2 UNCAPPED வீரர்கள் - ரூ.14.20 கோடிக்கு தட்டிய தூக்கிய CSK

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
    • ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்க்கிறது

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர். இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், பிரசாந்த் வீர் என்ற UNCAPPED ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் போனார், இவரின் ஆரம்ப விலை ரூ.30 லட்சம் ஆகும். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன UNCAPPED வீரர் என்ற சாதனையை பிரசாந்த் வீர் படைத்தார். ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்த்து இந்த விலையை கொடுத்துள்ளது.

    அடுத்ததாக ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரையும் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன 2 UNCAPPED வீரர்களையும் சி.எஸ்.கே அணி வாங்கியுள்ளது.

    Next Story
    ×