என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    அனைத்து ஆட்டங்களும் முக்கியம்: விரைவாக வெற்றி பெற வேண்டியது அவசியம்- ராகுல் டிராவிட்
    X

    அனைத்து ஆட்டங்களும் முக்கியம்: விரைவாக வெற்றி பெற வேண்டியது அவசியம்- ராகுல் டிராவிட்

    • ராஜஸ்தான் ராயல்ஸ் 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    • இனிமேல் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் நான்கு போட்டிகளில் இரண்டில் தோல்வி, இரண்டில் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது.

    டெல்லி அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது. லக்னோனிக்கு எதிராக இரண்டு ரன்களில் வெற்றியை நழுவ விட்டது.

    நாளை ஆர்.சி.பி. அணியை எதிர்கொள்ள உள்ளது. தற்போது புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் எட்டு போட்டியில் இரண்டில் மட்டும் வெற்றி பெற்று 8ஆவது இடத்தில் உள்ளது.

    இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இனிமேல் விளையாட இருக்கும் அனைத்து போட்டிகளிலும் (6) வெற்றிபெற வேண்டும்.

    இந்த நிலையில் அந்த அணியின் ஆலோசகரான ராகுல் டிராவிட் இனிமேல் தப்பு செய்ய முடியாது. அனைத்து போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    ஆர்.சி.பி.க்கு எதிரான நாளைய ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம். உண்மையில், நாங்கள் இருக்கும் நிலையில் இங்கிருந்து ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிக தவறுகளைச் செய்ய முடியாது. தொடரின் தற்போதைய நிலையில் பாதி தூரம் தாண்டிய நிலையில் நாங்கள் புள்ளிகள் பட்டியலில் கீழ் பாதியில் இருக்கிறோம்.

    நாங்களில் புள்ளிகள் பட்டியலில் விரைவாக முன்னேற தொடங்க வேண்டும், மேலும் ஆட்டங்களில் விரைவாக வெற்றி பெறவும் வேண்டும். இனிமேல் சறுக்குவதற்கான எந்த வழியும் வாய்ப்பும் இல்லை.

    இந்த தொடரில் இன்னும் நிலைத்திருக்க நாங்கள் நன்றாக விளையாட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இப்போது, இதற்கு முன்பு இரண்டு நெருக்கமான ஆட்டங்களில் தோற்றுள்ளோம், ஆனால் நாங்கள் சில நல்ல கிரிக்கெட்டையும் விளையாடியுள்ளோம்.

    இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×