என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐ.பி.எல். 2025: ஆர்.சி.பி.க்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ்
    X

    ஐ.பி.எல். 2025: ஆர்.சி.பி.க்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

    • 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டுள்ளனர்.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரங்கேறும் 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையே போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கி விளையாடியது.

    இதில், அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 75 ரன்கள், துருவ் ஜூரல் 35, ரியான் பராங் 30 ரன்கள்,, சஞ்சு சாம்சன் 15 ரன்கள் எடுத்தனர்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 173 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் ஆர்சிபி களமிறங்க உள்ளது.

    Next Story
    ×