என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

புதிய பேட்ஸ்மேன்களிடம் இதை நான் விரும்பவில்லை- வெற்றி குறித்து ஷ்ரேயாஸ் கருத்து
- கடினமான லென்த் பந்துகளை அடிப்பது கடினமாக இருப்பதாக அர்ஷ்தீப் என்னிடம் கூறினார்.
- இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறந்த லெக் ஸ்பின்னராக சாஹல் செயல்பட்டு வருகிறார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 34-வது லீக் போட்டியில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டி மழை காரணமாக 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய ஆர்சிபி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து விளையாடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் புதிய பேட்ஸ்மேன் வந்து உடனடியாக செட்டிலாகி விளையாடுவதை நான் விரும்பவில்லை என பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.
இது குறித்து பஞ்சாப் அணி கேப்டன் கூறியதாவது:-
பல்வேறு வகைகள் தான் வாழ்க்கையின் ருசி என்று சொல்வார்கள். அதுபோல இந்த மைதானத்தில் நாங்கள் நிறையப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளோம். அது நல்ல சவால். வித்தியாசமாக நான் எதுவும் சிந்திக்கவில்லை. எனது உள்ளுணர்வுகளை பின்பற்றி விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்தேன்.
புதிய பேட்ஸ்மேன் வந்து உடனடியாக செட்டிலாகி விளையாடுவதை நான் விரும்பவில்லை. மார்கோ யான்சென் பிட்ச்சில் எக்ஸ்ட்ரா பவுன்சை உருவாக்கி வேகமாக பௌலிங் செய்து எங்களுடைய கப்பலை நிலை நிறுத்தினார். பவுலர்கள் அவருக்கு உதவி செய்தனர். பிட்ச் எப்படி இருக்கும் என்று தெரியாத நிலையில் எங்களுடைய பவுலர்கள் அதற்குத் தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பினேன்.
கடினமான லென்த் பந்துகளை அடிப்பது கடினமாக இருப்பதாக அர்ஷ்தீப் என்னிடம் கூறினார். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நேராக சிக்சர் அடிக்க முடியவில்லை. எனவே அதை வைத்து நாங்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினோம்.
ஒரு பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாட வேண்டும். அதை இன்று எங்களுக்கு நேஹல் செய்தார். நீங்கள் மேட்ச் வின்னர் என்பதால் நமக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று சஹாலிடம் கூறினேன். கம்பேக் கொடுக்கும் தன்மை கொண்டுள்ள அவர் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறந்த லெக் ஸ்பின்னராக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.






