என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    குறை கூறுவதற்கு.. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வெற்றி குறித்து சுப்மன் கில் கருத்து
    X

    குறை கூறுவதற்கு.. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வெற்றி குறித்து சுப்மன் கில் கருத்து

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.
    • இந்திய சார்பில் 3 பேர் சதம் அடித்தனர்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த 2-ந் தேதி அகமதாபாத் மைதானத்தில் துவங்கியது.

    இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் குவித்திருந்த வேளையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

    பின்னர் 286 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 146 ரன்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.

    இதன் காரணமாக இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் :

    இந்த போட்டியில் டாஸில் தோல்வியை சந்தித்தது உண்மை தான். ஆனால் போட்டியில் வெற்றி பெற்று விட்டோம் அதுதான் முக்கியம். என்னை பொறுத்தவரை டாஸ் என்பதை விட போட்டியின் முடிவு என்பது முக்கியம். அந்த வகையில் இந்த போட்டி எங்களுக்கு மிகச் சிறப்பான ஒன்றாக அமைந்தது.

    இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. மூன்று வீரர்கள் நமது அணி சார்பாக இந்த போட்டியில் சதம் அடித்துள்ளனர். பீல்டிங்கிலும் நமது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தது உண்மையிலேயே மகிழ்ச்சி. இந்த போட்டியில் குறை கூறுவதற்கு என்று எதுவும் இல்லை. அனைத்து வீரர்களுமே தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர்.

    என சுப்மன் கில் கூறினார்.

    Next Story
    ×