என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
- இந்த அணியில் காயம் காரணமாக கஸ் அட்கின்சன் இடம்பிடிக்கவில்லை.
- கிறிஸ் வோக்ஸ், ஜேமி ஓவர்டன், ஜேக்கப் பெத்தெல் மற்றும் பிரைடன் கார்ஸ் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரானது வரும் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், துணைக்கேப்டனாக ரிஷப் பண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாய் சுதர்ஷன், கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கும் வய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தாலைமையிலான இந்த அணியில் காயம் காரணமாக கஸ் அட்கின்சன் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் கிறிஸ் வோக்ஸ், ஜேமி ஓவர்டன், ஜேக்கப் பெத்தெல் மற்றும் பிரைடன் கார்ஸ் உள்ளிட்டோர் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலந்து அணி (முதல் டெஸ்ட்):-
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓல்லி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.






