என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவை மீண்டும் வீழ்த்த இந்தியா ஆர்வம்
    X

    2வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவை மீண்டும் வீழ்த்த இந்தியா ஆர்வம்

    • முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 12.3 ஓவரில் வெறும் 74 ரன்னில் சுருண்டது.
    • கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    சண்டிகர்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    கட்டாக்கில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி பஞ்சாப்பின் மொகாலி மாவட்டத்தில் உள்ள நியூ சண்டிகரில் இன்று நடக்கிறது.

    முதல் ஆட்டத்தில் இந்திய அணி திலக் வர்மா, அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரது கணிசமான பங்களிப்பால் 175 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டிப்பிடித்தது.

    பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பும்ரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் மிரட்டினர். இந்தியாவின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா 12.3 ஓவரில் வெறும் 74 ரன்னில் சுருண்டது.

    டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணிக்கு இந்த வெற்றி கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது. இதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் தென் ஆப்பிரிக்காவை வெல்ல தீவிரம் காட்டுவார்கள்.

    ஹர்திக் பாண்ட்யா இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் 100 விக்கெட் என்ற மைல் கல்லை எட்டுவார்.

    தொடக்க ஆட்டத்தில் மோசமான தோல்வியைத தழுவிய தென் ஆப்பிரிக்கா அதில் இருந்து மீண்டு எழுச்சி பெற முயற்சிக்கும்.

    அந்த அணியில் டிவால்ட் பிரேவிஸ், கேப்டன் மார்க்ரம், குயின்டான் டி காக், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் என அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை.

    இன்றைய போட்டியில் பேட்டால் பதிலடி கொடுக்க வரிந்து கட்டுவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா:

    அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரீத் பும்ரா.

    தென் ஆப்பிரிக்கா:

    குயின்டான் டி காக், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டிவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், டோனோவன் பெரேரா, மார்கோ யான்சென், லுதோ சிபாம்லா அல்லது கார்–பின் பாஷ் அல்லது ஜார்ஜ் லின்டே, கேசவ் மகராஜ், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ஜியா.

    Next Story
    ×