என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2வது போட்டியில் வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றுமா? இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
- வதோதராவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
அகமதாபாத்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
சுப்மன் கில் தலைமை யிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது.
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகி யுள்ளார். அவருக்கு பதிலாக பதோனி தேர்வு பெற்றுள்ளார்.
சீனியர் வீரரான விராட் கோலி பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். சர்வதேச போட் டியில் விராட் கோலி தொடர்ந்து 5 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து முத்திரை பதித்தார். இன்றைய ஆட்டத்திலும் விராட் கோலி மீதான எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதேபோல ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், கேப்டன் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் அந்த அணி தொடரை இழந்து விடும்.
ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்தியா, நியூசிலாந்து அணிகள் 121 போட்டிகளில் நேருக்கு நேர் மோதின. இதில் 63ல் இந்தியாவும், 50ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது. 7 போட்டி கைவிடப்பட்டது.






