என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டி: 2 மாற்றத்துடன் இந்தியா பந்து வீச்சு தேர்வு
    X

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டி: 2 மாற்றத்துடன் இந்தியா பந்து வீச்சு தேர்வு

    • முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
    • பும்ரா, அகஷர் படேலுக்கு இந்த போட்டியில் இடம் கிடைக்கவில்லை.

    மும்பை:

    இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

    இதையடுத்து, கடந்த 21-ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பும்ரா, அகஷர் படேலுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தியா:

    அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி.

    Next Story
    ×