என் மலர்
கிரிக்கெட் (Cricket)

எந்த குறைபாடும் இல்லாத மாஸ்டர்கிளாஸ்: சுப்மன் கில்லுக்கு சவுரவ் கங்குலி புகழாரம்
- எட்ஜ்பாஸ்டனில் சுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார்.
- நான் பார்த்ததில் இங்கிலாந்தில் சிறந்த இன்னிங்ஸ் இதுதான்- கங்குலி.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் குவித்தார். இது அவரின் முதல் இரட்டை சதமாகும். மேலும், இங்கிலாந்து மண்ணில் இந்திய பேட்டரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
முதல் டெஸ்டில் சதம் அடித்த சுப்மன் கில் 2ஆவது டெஸ்டில் இரட்டை சதம் விளாசியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, மாஸ்டர்கிளாஸ் பேட்டிங் என புகழாரம் சூட்டியுள்ளார்.
சுப்மன் கில் இரட்டை சதம் விளாசியது தொடர்பாக சவுரவ் கங்குலி கூறியதாவது:-
சுப்மன் கில்லின் இரட்டை சதம் குறைபாடு அற்ற, முற்றிலும் மாஸ்டர்கிளாஸ். எந்தவொரு காலக்கட்டத்திலும் இங்கிலாந்து மண்ணில் நான் பார்த்ததிலேயே சிறந்த இன்னிங்ஸ். கடந்த சில மாதங்களாக அவரிடம் மிக அதிகமான முன்னேற்றம். டெஸ்டிலவ் தொடக்க வீரர என்பதை அவரது இடம் இல்லை. இந்தியா வெற்றி பெறுவதற்கான டெஸ்ட் இது.
இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.