என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    என்னை நினைவில் வைத்திருப்பாரா?: யு.ஏ.இ. பந்து வீச்சாளரின் ஏக்கம்
    X

    என்னை நினைவில் வைத்திருப்பாரா?: யு.ஏ.இ. பந்து வீச்சாளரின் ஏக்கம்

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இரவு தொடங்குகிறது.
    • இந்திய அணி முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இரவு தொடங்குகிறது.

    இந்திய அணி நாளை துபாயில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது.

    இதற்கிடையே, ஐக்கிய அரபு அமீரக அணியில் ஹர்ஷித் கவுசிக், சிம்ரன்ஜித் சிங், துருவ் பராஷர், அலிஷான் ஷராபு, ஆர்யன்ஷ் ஷர்மா, ராகுல் சோப்ரா ஆகிய 6 இந்திய வம்சாவளி வீரர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், இந்திய கேப்டன் சுப்மன் கில்லுக்கு நான் பந்து வீசியுள்ளேன், என்னை அவர் நினைவில் வைத்திருப்பாரா என தெரியவில்லை என ஐக்கிய அரபு அமீரக பந்துவீச்சாளர் சிம்ரன்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சிம்ரன்ஜித் சிங் கூறியதாவது:

    மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க அகாடமியில் ஒரு இளம் சுழற்பந்து வீச்சாளராக இருந்தேன். எனக்கு சுப்மனை சிறு வயதிலிருந்தே தெரியும்.

    அது 2011 அல்லது 2012 வாக்கில். நாங்கள் காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை பயிற்சி செய்வோம். சுப்மன் கடைசியில் தனது தந்தையுடன் வருவார். நான் அவருக்கு எண்ணற்ற முறை பந்து வீசியிருப்பேன். அவர் என்னை நினைவில் வைத்திருப்பாரா என தெரியவில்லை என்றார்.

    Next Story
    ×