என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இருந்து ஹர்ஷித் ராணா விலகல்
    X

    டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இருந்து ஹர்ஷித் ராணா விலகல்

    • பேட்டிங் வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்த இந்திய திட்டமிட்டிருந்தது.
    • தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு தயார்படுத்திய நிலையில் காயத்தால் விலகியுள்ளார்.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்திய அணி உலகக் கோப்பை தொடருக்காக நன்றாக தயாராகி உள்ளது. உலகக் கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி அதை 4-1 எனக் கைப்பற்றியிருந்தது.

    உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 30 ரன்களில் வீழ்த்தியிருந்தது. இந்த நிலையில் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வந்த ஹர்ஷித் ராணா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில மாதமாக இவரை இந்திய அணி ஆல்-ரவுண்டர் பந்து வீச்சாளராக தொடர்ந்து பயன்படுத்தி வந்தது. இவருடம் பேட்டிங்கில் தனது பங்களிப்பை கொடுத்து வந்தார். இந்த நிலையில் ஹர்ஷித் ராணா விலகியுள்ளது இந்திய அணிக்கு இழப்பாக பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×