என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கொல்கத்தாவை விட கவுகாத்தி ஆடுகளம் சிறந்தது - இந்திய அணி துணை பயிற்சியாளர்
- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் 3 நாட்களில் முடிந்தது.
- கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் குறித்து விமர்சிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 124 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 93 ரன்னில் சுருண்டு கொண்டனர். 30 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 3 நாட்களில் இந்த டெஸ்ட் முடிந்தது. இதனால் கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் குறித்து விமர்சிக்கப்பட்டது. பயிற்சியாளர் காம்பீர் விருப்பப்படி பிட்ச் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கொல்கத்தாவை விட கவுகாத்தி ஆடுகளம் சிறப்பாக உள்ளதாக இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென்டோஷேட் தெரிவித்துள்ளார்.
முதல் நாள் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதல் நாளில் இரு அணிகளும் ஆட்டத்தை நன்றாக கணக்கிட்டதாக நான் நினைக்கிறேன். இந்திய அணி வீரர்கள் அற்புதமாக நிலைநிறுத்தி கொண்டனர். ஆட்டம் அவர்கள் பக்கம் சென்றபோது எங்களால் ஓரிரு முறை மீண்டும் கால் பதிக்க முடிந்தது. தொடக்கத்தில் பும்ரா விக்கெட் கைப்பற்றினார். பின்னர் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல் பட்டார். முதல் இன்னிங்ஸ் ரன் முக்கியமானதாகும். கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தை விட கவுகாத்தி பிட்ச் சிறந்ததாக இருந்தது" என்று கூறினார்.






