என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சிறப்பு டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் #T20WorldCup
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.
- கூகுள் தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது.
புதுடெல்லி:
10-வது ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தத் தொடரை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றன. இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. லீக், சூப்பர் 8, அரையிறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.






