என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 301 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
    X

    முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 301 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

    • கான்வே 56 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
    • சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி நியூசிலாந்து அணியின் ஹென்ரி நிக்கோலஸ், டேவன் கான்வே ஆகியோர் தொடகக் வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதலில் நிதானமாக விளையாடினர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கேர் சீராக உயர்ந்த வண்ணம் இருந்தது.

    இருவரும் நியூசிலாந்து அணி 100 ரன்கள் கடக்கும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அத்துடன் இருவரும் 60 பந்துகளில் அரைசதம் கடந்தனர். இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர்.

    நிக்கோலஸ் 4 ரன்னில் இருக்கும்போது ஹர்ஷித் ராணா பந்தில் கொடுத்த கேட்சை குல்தீப் யாதவ் பிடிக்க தவறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 69 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வே 56 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறியது.

    ஆனால் ஒருமுனையில் நங்கூரமிட்டு சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் அரைசதம் அடித்து அசத்தினார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் அடித்தது. சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    Next Story
    ×