என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஷஸ் 4-வது டெஸ்ட்: 152 ரன்னில் சுருட்டிய இங்கிலாந்தை 110 ரன்னில் மடக்கிய ஆஸ்திரேலியா
    X

    ஆஷஸ் 4-வது டெஸ்ட்: 152 ரன்னில் சுருட்டிய இங்கிலாந்தை 110 ரன்னில் மடக்கிய ஆஸ்திரேலியா

    • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 152 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 29.5 ஓவர்களே தாக்கு பிடித்தது.

    மெல்போர்ன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இப்போட்டி பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த டெஸ்ட் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செயதார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இங்கிலாந்தின் ஜோஷ் டங், அட்கின்சனின் அபார பந்துவீச்சில் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் 45.2 ஓவர்களில் 152 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 35 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார். அட்கின்சன் 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், கார்சே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 16 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. கிராலி 5, டக்கெட் 2, பெத்தெல் 1, ரூட் 0 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து ஹாரி ப்ரூக்- பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. ப்ரூக் 41 ரன்னில் அவுட் ஆனார்.

    அதனை தொடர்ந்து ஸ்மித் 2, வில் ஜக் 5, ஸ்டோக்ஸ் 16, கார்ஸ் 4, ஜோஸ் டங் 1 என வரிசை கட்டினர். 29.5 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்த இங்கிலாந்து அணி 110 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் நெசர் 4 விக்கெட்டும், போலண்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 42 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஒரு ஓவர் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா 4 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    Next Story
    ×