என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எமர்ஜிங் டி20 ஆசிய கோப்பை: அரையிறுதியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்

    • திலக் வர்மா 16 ரன்னிலும், அபிஷேக் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • ராமன்தீப் சிங் 34 பந்தில் 64 ரன்கள் அடித்து கடைசி வரை போராடினார்.

    வளர்ந்து வரும் வீரர்களுக்கான டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமனில் உள்ள அல் அமராத் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று இந்தியா- ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.

    ஜுபைத் அப்காரி 41 பந்தில் 64 ரன்கள் விளாசினார். செதிகுல்லா அடல் 52 பந்தில் 83 ரன்கள் குவித்தார். கரீம் ஜனத் 20 பந்தில் 41 ரன்கள் விளாசினார்.

    இந்திய அணி சார்பில் ரசிக் சலாம் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினாலும் அன்ஷுல் கம்போஜ் 3 ஓவரில் 40 ரன்களும், அக்யூப் கான் 4 ஓவரில் 38 ரன்களும், ராகுல் சாஹர் 3 ஓவரில் 48 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

    பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா ஏ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 19 ரன்னிலும், அபிஷேக் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    கேப்டன் திலக் வர்மா 16 ரன்னில் வெளியேறினார். ராமன்தீப் சிங் அதிரடியாக விளையாடி 34 பந்தில் 64 ரன்கள் அடித்தாலும் அணியை வெற்றி நோக்கி அழைத்து செல்ல முடியவில்லை. இறுதியாக இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது.

    இதனால் ஆப்கானிஸ்தான் ஏ அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா ஏ அணிக்கு அதிர்ச்சி அளித்தது.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை ஆப்கானிஸ்தான் ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ- ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    Next Story
    ×