என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.17 கோடி நஷ்டம்
    X

    டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.17 கோடி நஷ்டம்

    • ஆஷஸ் டெஸ்ட் முதல் போட்டியில் டிராவிஸ் ஹெட் 69 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
    • 104 ஆண்டுகளுக்குப் பிறகு AUS vs ENG ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து விளையாடும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விளையாடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிராவிஸ் 69 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.

    இதன் மூலம் 104 ஆண்டுகளுக்குப் பிறகு AUS vs ENG ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது.

    இந்நிலையில், பெர்த்தில் நடந்த ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவு பெற்றதால், டிக்கெட் விற்பனையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.17 கோடி நஷ்டம் ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×